வவுனியா மாநகர சபையின் பண்டாரிகுளம் வட்டாரம் தொடர்பான 04மாத பதிவு – வதந்திகளுக்கு முதல்வரின் முற்றுப்புள்ளி
வவுனியா மாநகர சபையின் பண்டாரிகுளம் வட்டாரம் தொடர்பான 04மாத பதிவு – வதந்திகளுக்கு முதல்வரின் முற்றுப்புள்ளி
வட்டாரம் – 03 #பண்டாரிகுளம்
முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபன் கல்வி கற்ற பாடசாலையை மையப்படுத்திய வட்டாரத்தின் அபிவிருத்தி தொடர்பான பார்வை …
வவுனியா மாநகர சபையின் நிர்வாக எல்லைக்குள் அமைந்துள்ள #பண்டாரிகுளம் வட்டாரம், வரலாற்று, சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி ஆகும். இந்த வட்டாரம் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையிலும், நகரமயமாதல் வேகமாக நடைபெற்று வரும் சூழலிலும், மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கேற்ப புதிய வளர்ச்சி முயற்சிகள் அவசியமாகின்றன.
இதனை முன்னிட்டு, பண்டாரிகுளம் வட்டாரத்தில் மக்களை கவரும் வகையில் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி முயற்சிகளை வடிவமைப்பது, மாநகர சபையின் முக்கியப் பொறுப்பாகும். இத்திட்டங்கள் மூலம் மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துதல் ஆகியவை குறிக்கோளாகக் கொள்ளப்படுகின்றன.
அதற்காக கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், விளையாட்டு, கலாசாரம், பெண்கள் மற்றும் இளைஞர்கள் அபிவிருத்தி போன்ற துறைகளில் பல்வேறு திட்ட வரைபுகள் முன்வைக்கப்படவுள்ளன. இத்திட்டங்கள் நடைமுறைக்கு வந்தால், பண்டாரிகுளம் வட்டாரம் மக்கள் நட்பு, பசுமைச் சூழல் கொண்ட, நவீன வசதிகளுடன் கூடிய ஒரு முன்னேற்றமான வட்டாரமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநகர முதல்வரால் தொடரப்பட்ட, நடைபெற்றுக்கொண்டிருக்கும் மற்றும் செயற்படுத்தவுள்ள திட்டங்களின் தொகுப்பு வட்டார மக்களுக்காக….
01) வ/விபுலானந்தா கல்லூரியில் பழைய மாணவர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக அலுவலக மேசை(15 000/-) மற்றும் அலுவலக கதிரை(15 000/-)
என்பன அன்பளிப்பு செய்யப்பட்டது.
02) PSDG நிதியின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் சனசமூக நிலைய கட்டிட பணிகளை துரிதப்படுத்தியதுடன் முன்பள்ளி நடாத்தப்படும் இடம் பொருத்தமற்று இருப்பதனால் 2026 ஆம் ஆண்டு முதல் தற்காலிகமாக முன்பள்ளியை சனசமூக நிலைய கட்டிடத்தினுள் நடாத்த வசதிகளை சனசமூக நிலையத்தின் ஊடாக முன்னெடுத்தல்
03) PSDG நிதியின் ஊடாக குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளை துரிதமாக நிறைவேற்றியதுடன் 2026 ஆம் ஆண்டுமுதல் சனசமூக நிலையத்தின் ஊடாக பராமரிப்பு செலவுகளுக்காக மிக குறைந்த கட்டணத்தில் குடிநீர் விநியோகம் மக்களுக்காக வழங்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை.
04) வ/விபுலானந்தா கல்லூரி சார்பாக சர்வதேச போட்டியில் பங்குபற்றிய மாணவிக்கு முதல்வர் நிதி ஐம்பதாயிரம் ரூபா ( 50 000/- ) மற்றும் முதல்வரின் கோரிக்கைக்கு அமைவாக விபுல சாரணர்கள் சார்பாக பழைய மாணவன் குமணன் அவர்களினால் ஒரு இலட்சம் ரூபாவும் (100 000/-) வழங்கப்பட்டமை.
05) குளோப்மில் வீதி 2.5 மில்லியன் ரூபா நிதியில் திருத்த பணிகள் முன்னெடுக்கப்பட்டது.
06) பசுமை இயக்கத்தின் பூரண அனுசரணையில் மதிப்புமிகு பசுமை இயக்க நிறுவுனர் கிளி அண்ணா (தனபாலசிங்கம்) அவர்களின் அனுசரணையில் வைரவபுளியங்குளம் ஊடான பாடசாலை வீதியில் சிறப்பான மர நடுகையுடன் , பசுமை இயக்கத்தால் தொடர்ந்தும் பராமரிக்கப்படுகின்றது இது மாநகர சபையினதும் பசுமை இயக்கத்தினதும் வெற்றிப்பயணம்
07) வ/விபுலானந்தா கல்லூரியின் ஆரம்ப பிரிவிற்கும் , இடை நிலை பிரிவிற்கும் தனித்தனியாக இரும்பாலான குப்பைத்தொட்டிகள் வழங்கப்பட்டமை.
08) வீதி விளக்குகள் தொடர்ச்சியாக திருத்தப்பட்டமையுடன், புதிய பெரிய மற்றும் சிறிய வீதி விளக்குகள் தாராளமாக பொருத்தப்பட்டுள்ளமை.
09) திண்டுகல் ஐ.லியோனி அவர்களின் பாட்டுமன்ற நிகழ்வை நடாத்துவதற்கு பழைய மாணவர்களின் கோரிக்கைக்கு ஊடாக முற்றுமுழுதான மண்டபம் மற்றும் ஏனைய அனுசரணையை முன்னெடுத்ததுடன் பாடசலையின் அபிவிருத்தி நிதியாக செலவுகளை விடுத்து தேறிய இலாபமாக 1.3 மில்லியன் பயன்படுத்தப்பட இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
10) ஆளும் அரசின் திட்டத்தின் கிரவல் வீதிகள் 4 சிறிய வீதிகள் அதாவது குளோப்மில் வீதியின் உள்ளக வீதிகள் முன்மொழியப்பட்டுள்ளது. மாநகர சபை கிரவல் வீதிகளை
2026 பாதீட்டில் தார் வீதிகளாக மக்களுக்கு அமைத்து கொடுக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
11) வெள்ளம் ஏற்படும் பகுதியாக மாநகர முதல்வரால் இனம்காணப்பட்ட பகுதிகளில் நிலைமாற்றி அமைந்துள்ள சந்தியில் உடனடியாக பாலம் அமைக்கும் திட்டங்கள் நடைமுறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
12) மக்கள் முற்றத்தில் மாநகராட்சி எனும் நடமாடும் சேவை கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. வடிகால்கள் தூர்வாரல் முன்னெடுக்கப்பட்டது.
13) காப்பெற்வீதியின் பாதுகாப்பு கருதி சோல்டர் போடுவதற்கு 2.5 மில்லியன் ரூபா நிதி வட்டாரத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகர சபையின் பொறியியலாளர் அவர்களினால் அடையாளப்படுத்த்கப்பட்ட பகுதிகளில் கொங்கிறீட் சோல்டர் போடப்படும்
14) RDS இல் மோசமாக காணப்படும் சிறுவர் பூங்கா புனரமைப்பிற்கு உடனடியாக 2026 பாதீட்டின் ஊடாக 1 மில்லியன் நிதி முன்மொழியப்படவுள்ளது.
15) ரகுபாக்கம் / 60 ஏக்கர் குழாய்கிணறு தொடர்பானது மிகவும் பழமையான குழாய்கிணறுகளில் அடியில் கரள் படிவுகள் அதிகமாக காணப்படுவதுடன் நீண்டகாலம் பயன்படுத்தாமையால் நீரின் தரம் பரிசோதிக்க மாநகர சபை திகதி தீர்மானிக்கப்பட்டதை அறிந்தவுடன் கிராம மக்களிடம் குளோரின் கொடுத்து எமது பரிசோதனை குறிப்பிட்ட சிலரால் முடக்கப்பட்டமை.
(குடிநீரின் தரம் (Quality of Drinking Water) என்பது மக்களின் ஆரோக்கியத்துடன் நேரடியாகப் பிணைந்த ஒரு முக்கிய அம்சம். குறிப்பாக குழாய்கிணறுகள் (Tube Wells) வழியாகப் பெறப்படும் நீர், சரியான தரத்தில் பராமரிக்கப்படாவிட்டால், பலவித நோய்களுக்கு வழிவகுக்கும்)
16) 2026 ஆம் ஆண்டு பாதீட்டில் ஒளிரும் மாநகரம் செயற்றிட்டத்தின் ஊடாக அனைத்து வீதிகளும் ஒளியூட்டப்படும்
17) 2026 ஆம் ஆண்டு பாதீட்டில் தார் வீதிகள் அனைத்தினதும் திருத்தங்கள் முன்னெடுக்கப்படும்.
அவர்கள் தடையுத்தரவு நோக்கிய பயணத்துடன் கதிரைக்கான பயணம்.














