92 வயதில் உலகின் வயது முதிர்ந்த அதிபராகும் பால் பியா..!
92 வயதில் உலகின் வயது முதிர்ந்த அதிபராகும் பால் பியாவுக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. ஆப்பிரிக்காவில் 1982முதல் ஒரு நாட்டை வழிநடத்தும் தலைமைப் பதவியில் 92 வயதிலும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது சர்வதேச சமூகத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
3 கோடி மக்களை உள்ளடக்கிய கேமரூன் நாட்டில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் குளறுபடி நடந்திருப்பதாகவும், இதனால் இத்தேர்தலில் தானே வெற்றி பெற்றதாக அறிவித்துக் கொண்டார் இசா சிரோமா. இதையடுத்து, அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள மறுதேர்தல் நடத்தப்படுமென அறிவித்தார் அதிபர் பால் பியா.
இதனை எதிர்த்து, கேமரூனின் முக்கிய நகரங்களில் வன்முறை வெடித்தது. எதிர்க்கட்சித் தலைவர்கள், அவரது ஆதரவாளர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், தேர்தல் வழக்கு அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பால் பியா 53.66 சதவீத வாக்குகளையும் அவரை எதிர்த்து போட்டியிட்ட இசா சிரோமா 35.19 சதவீத வாக்குகளையும் பெற்றதாக அந்நாட்டின் அரசமைப்பு கவுன்சில் அறிவித்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அதிபர் தேர்தலில் பால் பியாவின் வெற்றி செல்லுபடியாகுமென திங்கள்கிழமை(அக். 27) உத்தரவிட்டுள்ளது.