;
Athirady Tamil News

ஆடை விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்து

0

நுவரெலியா ராகலையில் பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் நேற்று (27) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரின் முயற்சியில் தீப்பரவல் இன்று (28) அதிகாலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆடைகள் எரிந்து நாசம்
எவ்வாறாயினும் இந்த தீ விபத்தில் குறித்த ஆடை வர்த்தக நிலையத்தில் உள்ளே இருப்பில் வைக்கப்பட்டிருந்த ஏராளமான ஆடைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முதலில் மின் பிறப்பாக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் தீப்பரவியதாகவும் பின்னர் அத் தீயே விற்பனை நிலையம் முழுவதும் பரவியதாகவும் தெரிவிக்கின்றனர்.

எனினும் தீ விபத்துக்கான உரிய காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை ராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.