5 லட்சம் கேட்ட குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கைது
திருகோணமலை – குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, இலஞ்ச ஆணை குழுவினால் இன்று(31) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
5 லட்சம் ரூபா பணத்தை லஞ்சமாக பெற முனைந்தபோது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.