;
Athirady Tamil News

ரஷ்யாவை சூழ்ந்த 261 உக்ரைனிய ட்ரோன்கள்: ரஷ்யா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

0

உக்ரைன் நடத்திய தீவிரமான ட்ரோன் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்து இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன் ட்ரோன் தாக்குதல்

ரஷ்ய நகரங்களை குறிவைத்து கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 261 ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், தாக்குதலுக்கு ஏவப்பட்ட 261 ஆளில்லா விமானங்களையும், இரண்டு வழிகாட்டப்பட்ட வான் குண்டுகளையும் இடைமறித்து அழித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

இராணுவ சேத விவரம்

இதுவரையிலான போர் மோதலில் அழிக்கப்பட்டுள்ள உக்ரைனிய ராணுவ சாதனங்களின் மொத்த புள்ளிவிவர பட்டியலையும் ரஷ்ய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, இதுவரை 95,320 ட்ரோன்கள், 668 போர் விமானங்கள், 283 ஹெலிகாப்டர்கள் மற்றும் 1609 பலதரப்பட்ட ஏவுகணை அமைப்பு ஆகியவற்றை அழித்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.