100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் – 4 ஐயப்ப பக்தர்கள் பலி!
கார் விபத்தில் சிக்கி 4 ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்தனர்.
கார் விபத்து
கர்நாடகா, கோலார் மாவட்டத்தில் சபரிமலைக்கு புறப்பட்ட 4 ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் அதிவேகமாக இயக்கப்பட்டதால், மேம்பால தடுப்பில் மோதி கீழே விழுந்து கோர விபத்து ஏற்பட்டது.
மாலூர் தாலுகா, அப்பனஹள்ளி கிராமத்தில் இந்த விபத்து நடந்தது. காரில் பயணித்த நண்பர்கள் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
நால்வர் பலி
முதற்கட்ட விசாரணையில், கார் அதிவேகத்தில் சென்றதே விபத்திற்கு காரணம் என்று போலீசார் தெரிவித்தனர். கார் சுமார் 100 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் பாய்ந்து விழுந்தது.
சடலங்கள் உடற்கூராய்வுக்கு பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.