;
Athirady Tamil News

குஞ்சுக்குளத்தில் நிர்க்கதியான 3 பேரை பத்திரமாக மீட்ட விமானப்படை!

0

மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 3 பேரை இலங்கை விமானப்படையினர் ஹெலிக்கொப்டர் மூலம் மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இன்று (30) மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் மீட்புப் பணிகளுக்காக விமானப்படைக்குச் சொந்தமான பெல்-212 ஹெலிக்கொப்டர் புறப்பட்டுச் சென்றது.

இதன்போது வெள்ளப்பெருக்கில் வீட்டினுள் சிக்கிய 3நபர்களை விமானப்படை ரெஜிமென்ட் விசேட படைப்பிரிவின் மீட்புக் குழுவினர் மீட்டனர்.

அவர்கள் அங்கிருந்து வவுனியா விமானப்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டு நோயாளர் காவு வண்டியினூடாக வவுனியா வைத்தியசாலையில் பாதுகாப்பாக அனுமதிக்கப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.