;
Athirady Tamil News

புதிய விசா சலுகை ; சீனர்களுக்கு ரஷ்யாவில் 30 நாள் சுதந்திரப் பயணம்

0

சீன குடிமக்களின் பல பிரிவுகளுக்கு 30 நாட்கள் வரை ரஷ்யாவிற்கு விசா இல்லாத அனுமதியை வழங்கும் ஆணையில் ஜனாதிபதி விளாடிமிர் புடின் கையெழுத்திட்டார்.

சுற்றுலாப் பயணிகள், வணிகர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பல பிரிவினர் இதனால் பயன்பெற முடியும்.

பிப்ரவரி 2022 இல் ரஷ்யா பல்லாயிரக்கணக்கான வீரர்களை உக்ரைனுக்கு அனுப்புவதற்கு சில நாட்களுக்கு முன்பு புடினும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் வரம்புகள் இல்லை என்ற புதிய கொள்கையின் அடிப்படையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஆனால், மேற்கத்திய நாடுகளின் தடைகளை எதிர்கொள்ள ரஷ்யா அப்போதிருந்து சீனாவிடமிருந்து இறக்குமதியையே பெரிதும் நம்பியுள்ளது.

முன்னதாக ரஷ்ய குடிமக்களில் பல பிரிவினருக்கு சீனாவிற்கு விசா இல்லாத அனுமதியை வழங்குவதற்கான சீனாவின் நடவடிக்கையை அடுத்தே புடின் இந்த முடிவை எடுத்துள்ளார்.

மேலும், புதிய ரஷ்ய விதிகள் செப்டம்பர் 14, 2026 வரை அமுலில் இருக்கும். ஆனால், புதிய விதிகள் சீன புலம்பெயர்ந்தோர், நீண்டகால மாணவர்கள் அல்லது தளவாடங்கள் மற்றும் போக்குவரத்துத் துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு பொருந்தாது.

செப்டம்பர் 15 முதல் ஒரு வருடத்திற்கு சாதாரண ரஷ்ய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு 30 நாட்கள் வரை விசா இல்லாத பயணத்தை வழங்குவதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் செப்டம்பர் மாதம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.