;
Athirady Tamil News

சுமத்ரா தீவில் பெரும் பேரழிவு ; உணவின்றி தவிக்கும் மக்கள்

0

இந்தோனேசியாவில் ஏற்பட்ட சூறாவளியுடனான கடும் மழையால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக, சுமத்ரா தீவின் சில பகுதிகளுக்கு மீட்புப் பணியாளர்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன், அத்தியாவசிய பொருட்களையோ கொண்டு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருநிலப்பரப்புடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், பொது மக்கள் உணவின்றி பெரும் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேன்யார் என அழைக்கப்படும் மிக அரிதான வெப்ப மண்டல புயல், இந்தோனேசியாவில், பேரழிவு தரும் நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தை ஏற்படுத்தியது.

குறித்த பிரதேசத்தில், வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தாய்லாந்து, மலேசியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் உட்பட ஆசியா முழுவதும் 900க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக சர்வதேச புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு சுமத்ரா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்கள், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களைப் பெறும் நோக்கில் மக்கள் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், 15 மீட்டர் உயரத்துக்கு சேற்றால் மூடப்பட்டுள்ள வீதிகளைத் துப்பரவு செய்ய கனரக இயந்திரங்களின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.