அதிக விலைக்கு உணவு பொருட்களை விற்றால் சட்ட நடவடிக்கை
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், உணவு பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
உணவு பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு தகவல் வழங்குமாறு அச்சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், மாவட்ட ரீதியாக உள்ள பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகளிடமும் இது தொடர்பில் முறைப்பாடு அளிக்க முடியும் என பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.