;
Athirady Tamil News

தென்மராட்சி மண்ணில் முதன்முறையாக ‘தென்னிந்தியக் கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை’

0
சாவகச்சேரி நகராட்சி மன்றமும் யாழ்.இந்திய துணைத்தூதரகமும் இணைந்து தென்மராட்சி மண்ணில் முதன்முறையாக நடத்துகின்ற ‘தென்னிந்தியக் கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை’ எனும் நடன நிகழ்வு நாளை மாலை 5.30 மணிக்கு நகராட்சி மன்றத்தின் பொன்விழா மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி பிரதம விருந்தினராக கலந்து கொள்ளும் இந்நிகழ்வில் தென்னிந்திய கலைஞர்களின் கதகளி, மற்றும் மோகினியாட்டம் ஆகிய ஆற்றுகைகள் இடம்பெறவுள்ளன.

தென்மராட்சி மண்ணில் முதன்முறையாக இடம்பெறும் தென்னிந்திய கலைஞர்களின் ஆற்றுகையினை கண்டுகளிக்க வருமாறு சாவகச்சேரி நகராட்சி மன்றத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.