;
Athirady Tamil News

பிரான்ஸில் அழகு நிலையம் மீது குண்டு வீச்சு; 6 பேர் காயம்

0

பிரான்ஸில் அழகு நிலையம் ஒன்றின் மீது கிரைனைட் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் தென் கிழக்கு நகரமான Grenoble இல் இச்சம்பவம் இன்று பெப்ரவரி 6, வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

அங்குள்ள அழகு நிலையம் ஒன்றுக்குள் திடீரென மர்ம நபர்கள் சிலரால் கிரைனைட் குண்டு வீசப்பட்டது. கடைக்குள் விழுந்த குண்டு வெடித்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. சம்பவத்தில் கடையில் இருந்த 5 வயது சிறுவன் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.

கட்டிடம் ஒன்றின் தரை தளத்தில் அமைந்துள்ள இந்த அழகு நிலையத்துக்கு வந்த முகமூடி அணிந்த இருவர், இந்த கிரைனைட்டை வீசிவிட்டு தப்பி ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை இதே நகரில் சென்ற 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதி மதுபான நிலையம் ஒன்றில் கிரைனைட் வீசப்பட்டதில் 15 பேர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.