;
Athirady Tamil News

பெரும் துயரை ஏற்படுத்திய மருத்துவ பீட மாணவனின் மரணம்

0

தங்காலை, மாவெல்ல கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த, களனி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மிரிஸ்ஸ, பொலத்து மோதர பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் மாவெல்லைப் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருடன் சென்றிருந்த நிலையில், கடலில் நீராடச் சென்ற போது அலையில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தங்காலை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.