;
Athirady Tamil News

ஏக்கிய ராச்சிய வேணாம் பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

0

ஏக்கிய ராச்சிய வேணாம் பிரித்தானியாவில் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம

பிரித்தானியா வாழ் ஈழத்தமிழர்களினால் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் முன்பாக இலங்கையின் சுதந்திர தினத்தை கறுப்பு நாள் எனத் தெரிவித்தும் ஐக்கிய ராச்சிய வேணாம் எனத் தெரிவித்தும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவைச் சேர்ந்த பல்வேறுபட்ட ஈழத்தமிழ் அமைப்புகளும் இணைந்து இந்த போராட்டத்தை ஒருங்கிணைந்திருந்தனர்.

இதில் பல நூற்றுக்கனக்கான தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து இலங்கையின் சுதந்திரதினம் தமிழருக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளில் போராட்டத்திற்க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தின் போது பேரணியும் நடைபெற்றது.

இலங்கை உயர்ஸ்தானிகர் காரியாலயம் முன்பாக ஆரம்பித்த பேரணி லண்டன் trafalgar சதுக்கம் வரை சென்று முடிவடைந்தது.

சுயநிர்ணயம், தன்னாட்சி உட்பட்ட பல்வேறுபட்ட கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.