;
Athirady Tamil News

அமெரிக்காவின் அழுத்தத்தில் ஈரான் ; 37 ஆண்டுகளின் பின் கமேனி செய்த செயலால் சந்தேகம்

0

அமெரிக்காவின் தொடர் மிரட்டல்கள் ஒருபக்கம் இருக்க, 37 ஆண்டுகளில் முதல் முறையாக விமானப்படை தளபதிகளுடான வருடாந்திர சந்திப்பில் பங்கேற்காமல் ஈரான் ஆட்சியாளரான மதகுரு கமேனி தவிர்த்துள்ளார்.

பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் கொந்தளித்துள்ள மக்கள், ஈரானில் அந்நாட்டு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டங்களை ஆட்சியாளரான மதகுரு கமேனி ஒடுக்கி வருகிறார்.

கடும் எச்சரிக்கை
பொதுமக்கள் மீதான ஆளும் அரசின் தாக்குதல்கள் பெரும் கண்டனங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், போர்க்கப்பல்களை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அனுப்பினார். பிராந்திய அளவில் பெரும் போர் வெடிக்கும் என்று அந்நாட்டுக்கு எதிராக கடும் எச்சரிக்கையையும் விடுத்து இருந்தார்.

அமெரிக்க ராணுவத்தின் நகர்வுகளை ஈரான் கவனித்து வருகிறது. ஆட்சியாளர் மதகுரு கமேனி பாதுகாப்பாக சுரங்கப்பாதையில் பதுங்கி இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.

இந் நிலையில் 37 ஆண்டுகளில் இல்லாத நிலையாக, விமானப்படை தளபதிகளுடனான முக்கியமான வருடாந்திர சந்திப்பை கமேனி தவிர்த்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கூட்டத்தில் மூத்த தளபதிகள், உயரதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தற்போதுள்ள அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, சந்திப்பை கமேனி தவிர்த்திருப்பது, சர்வதேச அரசியலில் அமெரிக்கா, ஈரானுக்கு அளித்து வரும் நெருக்கடியாக கவனிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.