யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலையான சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம்
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் படுகொலையான சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த போராட்டம் நடைபெற்றது.
அல்லைப்பிட்டி பகுதியில் பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை தாம் வழி மறித்ததாகவும் , அதன் போது வாகனத்தை நிறுத்தது சென்றமையால் , வாகனத்தின் மீது மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் வாகன சாரதியான சிறுவன் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
நிற்காமல் சென்ற வாகனத்தினை பொலிஸார் வழிமறித்த பின்னரே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது எனவும் , அதொரு பொலிஸாரின் திட்டமிட்ட படுகொலை எனவும் குற்றச்சாட்டுக்கள் எழும்பி வரும் நிலையில் , படுகொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு நீதி கோரி போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அதேவேளை , குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் , சம்பவம் தொடர்பிலான அடுத்த வழக்கு விசாரணைகள் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
