;
Athirady Tamil News

ஈரானுக்கு எதிரான போரில் மிகப்பெரிய வெற்றி; டிரம்ப் தெரிவிப்பு!

0

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அறிவித்துள்ளார்.

ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டின் கடற்படை மற்றும் விமானப்படை சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்
அடுத்த 2 முதல் 3 வாரங்களில் இந்த ராணுவ நடவடிக்கைகள் முழுமையாக முடிக்கப்பட்டு, போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் உறுதி அளித்துள்ளார்.

இந்த யுத்தத்தினால் இஸ்ரேல் மற்றும் அரபு கூட்டணி நாடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட அமெரிக்கா அனுமதிக்காது என்றும், அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானின் அணு ஆயுத முயற்சிகள் உலகிற்கு பெரும் அச்சுறுத்தல் என்பதால், இந்த நடவடிக்கை அவசியமானது என அவர் நியாயப்படுத்தினார்

. உலக நாடுகளின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்யும் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க நட்பு நாடுகள் முன்வர வேண்டும் என்றும் டொனால்ட் டிரம்ப் கேட்டுக்கொண்டார்.

அதோடு போர் முடிவுக்கு வந்து மிக விரைவில் அமைதி திரும்பும் என்றும், அமெரிக்கா தனது இலக்குகளை எட்டிவிட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.