;
Athirady Tamil News

போருக்கு மத்தியில் அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் உருக்கமான கடிதம்

0

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தொடுத்துள்ள போரால் வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வரும் இந்த போர் ஓய்வதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.

இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானை அடுத்த இரண்டு, மூன்று வாரங்களுக்கு கடுமையாக தாக்க போவதாக தெரிவித்தார். ஈரான் ஒப்பந்தம் ஒன்றை ஏற்றுக்கொள்ள முன்வராவிட்டால் அந்த நாட்டை கற்காலத்திற்கு கொண்டு செல்வோம் என்று எச்சரித்தார். டிரம்பின் இந்த எச்சரிக்கையால் அமெரிக்கா-ஈரான் போர் மேலும் தீவிரமடையும் என்று தெரிகிறது.

இந்த உச்சக்கட்ட மோதலுக்கு நடுவே, அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் பெசெஷ்கியன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: அமெரிக்கா-ஈரான் இடையே அரசியல் ரீதியாக மோதல்கள் இருந்தாலும், சாதாரண அமெரிக்க குடிமக்கள் மீது ஈரான் எந்த மோதல் போக்கையும் கொண்டிருக்கவில்லை. ஈரான் மக்கள் அமைதியையும் கவுரவத்தையும் விரும்புவர்கள். அமெரிக்க மக்கள் ஈரான் பற்றிய தவறான பிம்பத்தை விட்டு உண்மையை உணர வேண்டும் என்று கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.