;
Athirady Tamil News

ஜப்பான் மீண்டும் அணு ஆயுத நாடாக மாறக்கூடும்; சீனா பரபரப்புக் குற்றச்சாட்டு

0

5,500 அணு ஆயுதங்களைத் தயாரிக்கப் போதுமான 44.4 டன் புளூட்டோனியம் ஜப்பானிடம் உள்ளதாக சீனா பரபரப்புக் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. இது தொடர்பாக சீனா கூறுகையில், “ஜப்பான் இந்த புளூட்டோனியத்தை பயன்படுத்தினால், மிகக் குறுகிய காலத்திலேயே அந்த நாடு அணு ஆயுத நாடாக மாறிவிடும். ஆபத்தான முறையில் தனது ராணுவத் திறனை ஜப்பான் விரிவுபடுத்தி வருகிறது.

ஜப்பான் ‘மூன்று அணு ஆயுதத் தடைக் கொள்கைகள்’ (அணு ஆயுதங்களை வைத்திருக்காது, உருவாக்காது, நாட்டுக்குள் அனுமதிக்காது) என்ற கட்டுப்பாடுகளில் இருந்து முழுமையாக விலகினால், “மிகக் குறுகிய காலத்திலேயே நிஜத்தில் அணு ஆயுதம் கொண்ட நாடாக மாறிவிடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான், அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. தைவான் விவகாரத்திலும் சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கடைபிடிக்கிறது. இது தங்கள் இறையாண்மைக்கு எதிராக உள்ளதாக கருதும் சீனா, ஜப்பானுடன் பகைமையை கடைபிடித்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.