;
Athirady Tamil News

உலக நாடுகளுக்கு ஈரான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

0

புஷெஹர் (Bushehr) அணுமின் நிலையம் உட்பட ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களைக் கண்டித்து, ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸிற்கு அவசர கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அணுசக்தி தளங்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் முழு பிராந்தியத்தையும் பாரிய கதிரியக்கப் பாதிப்பிற்கு உள்ளாக்கும் அபாயம் உள்ளது.

இது மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஈடுசெய்ய முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் புஷெஹர் அணுமின் நிலையத்திற்கு மிக அருகில் மீண்டும் மீண்டும் நடத்தப்படும் தாக்குதல்கள் பெரும் கவலையைத் தருகின்றன.

ஒரு செயல்பாட்டில் உள்ள அணுசக்தி நிலையத்திற்கு மிக அருகாமையில் தாக்குதல் நடத்துவது, கதிரியக்கக் கசிவு ஏற்படும் அபாயத்தை உருவாக்குகிறது.

இது எவ்வகையிலும் சகித்துக்கொள்ள முடியாத ஒரு சூழலாகும்.

இந்தக் கடிதத்தின் விபரங்களை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது டெலிகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

மத்திய கிழக்கில் அணுசக்தி அச்சுறுத்தல் அதிகரித்துள்ளமை சர்வதேச ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.