காரைநகர் பேருந்து ஊழியர்களுடன் மோதல்: தனியார் பேருந்து உரிமையாளருக்கு ஒரு மாத காலப் பணித்தடை
;
இந்த விசாரணையின்போது, தனியார் பேருந்து உரிமையாளர் இ.போ.ச. ஊழியர்களுடன் முரண்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார்.
பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் சேவையில் ஈடுபடும் தரப்பினரிடையே ஏற்படும் இவ்வாறான ஒழுக்க மீறல்கள், வீதிப் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் செயற்பாடுகள், மேலதிக கட்டணம் அறவிடப்படுதல் அல்லது பயணிகள் வேறு ஏதேனும் அசௌகரியங்களை எதிர்கொண்டால், எவ்வித தயக்கமுமின்றித் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொலிகள்) அதிகார சபைக்கு உடனடியாக முறைப்பாடு செய்யுமாறு தலைவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.