;
Athirady Tamil News

குற்றம் நிரூபிக்கப்பட்டால் அமைச்சர் சிறைக்கு செல்வார்..! சிக்கப்போகும் முக்கிய புள்ளிகள்

0

இன்றைய தினம் பதவி விலகிய முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகொடியின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் தண்டனைக்கு உட்படுவார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நிலக்கரி இலங்கைக்கு வருவதற்கு முன்பே அது தரமற்றதாக இருப்பதாக கூறப்படுவது எவ்வாறு சாத்தியம் என தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட ஊடக இணைப்பாளர் தாஹா ஐன்ஸ்டீன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் லங்காசிறியின் நேர்காணலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நிலக்கரி ஊழல் தொடர்பாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அதற்கான தகுந்த தண்டனைகள் வழங்கப்படும் என ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். அதேபோல், குற்றச்சாட்டு உறுதியாக இருந்தால் சம்பந்தப்பட்ட அமைச்சர் கூட தண்டனையை எதிர்நோக்க நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இது தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாட்டு முறையை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இவ்வளவு தெளிவாக எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதால், நிலக்கரி தொடர்பான ஊழல் விவகாரம் அவர்களுக்கு எவ்வாறு தெரிய வந்தது என்ற கேள்வியும் எழுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.