;
Athirady Tamil News

கோவில் திருவிழாவில் நடனமாடியபோது மயங்கி விழுந்து பரதநாட்டிய கலைஞர் உயிரிழப்பு

0

கோழிக்கோடு,

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் பாலாழி பகுதியை சேர்ந்தவர் ஷாஜு. இவரது மனைவி ஷைனி (52 வயது). பரதநாட்டிய கலைஞர். இவர் நேற்று முன்தினம் இரவு சிரைக்கல் பகவதி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடந்த பரதநாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் திடீரென மேடையில் மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும், சிகிச்சை பலனின்றி ஷைனி இறந்தார். தகவல் அறிந்த பன்னிரங்காவு போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.