;
Athirady Tamil News

‘நாய் பாலியல்’ விவகாரம்; பகிரங்கமாக மன்னிப்பு கோரியஹிருணிகா பிரேமச்சந்திர

0

நாய் ஒன்றினை பாலியல் நரீதியாக துன்புறுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றசாட்டிமல் ஹிருணிகா பிரேமச்சந்திர, பேராசிரியர் அஷு மாரசிங்கவிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) செயற்பாட்டாளரான பேராசிரியர் அஷு மாரசிங்க, தன்னை அவமதிக்கும் வகையில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி, தான் ஒரு நாயை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டியதாகக் கூறி ‘சமகி வனிதா பலவேகய’ அமைப்பைச் சேர்ந்த ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் தனது முன்னாள் மனைவி ஆதர்ஷா கரந்தன ஆகியோரிடமிருந்து 1.5 பில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்குத் தொடர்ந்திருந்தார்.

1.5 பில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்கு
2022-ஆம் ஆண்டு ஹிருணிகாவால் வெளியிடப்பட்ட ஒரு காணொளியில், அஷு மாரசிங்க ஒரு நாயுடன் பாலியல் செயலில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இச்சம்பவம் அஷு மாரசிங்க மீதும், அவருக்கு நெருக்கமான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மீதும் பொதுமக்களிடையே கடும் வெறுப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பதவி விலகுவதாகக் கூறி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற விவகாரங்களுக்கான ஆலோசகர் பதவியிலிருந்து பேராசிரியர் அஷு மாரசிங்க விலகியிருந்தார்.

ஒரு நாயுடன் இயல்புக்கு மாறான பாலியல் செயலில் ஈடுபடுவது போன்ற காணொளியின் காரணமாகவே அவர் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டார் என அப்போது ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நீதித்துறைச் செயல்முறைகளுக்கு இணையாக எட்டப்பட்ட ஓர் உடன்படிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜரான ஹிருணிகா பிரேமச்சந்திர, தனது கட்சி மீது சுமத்தப்பட்ட அனைத்து அவமதிப்புகளுக்கும் மற்றும் அவதூறுகளுக்கும் மன்னிப்பும் வருத்தமும் தெரிவித்துக்கொண்டார்.

இந்த அவதூறு விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கோரப்பட்டிருந்த போதிலும், சர்ச்சைக்குரிய அந்தக் காணொளி போலியானது என்று நீதிமன்றத்தில் எவ்விதத் தகவலும் வெளியிடப்படவில்லை.

உண்மையான சூழ்நிலையைப் புரிந்துகொண்டு ஹிருணிகா எடுத்துள்ள இந்த நடவடிக்கைக்குத் தாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பதாகவும், தங்களுக்குச் சாதகமாக நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும், இவ்வழக்கின் வாதியான மாரசிங்கவின் தரப்பு செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டது.

சமூக ஊடகங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களைப் பயன்படுத்தி, சம்பவங்களைத் திரித்துக் கூறவோ அல்லது தனிநபர்களின் அந்தரங்க வாழ்க்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்தவோ கூடாது என்று முழு இலங்கைச் சமூகத்திடமும், எதிர்க்கட்சிக் குழுக்களிடமும் அஷு மாரசிங்க ஒரு விசேட வேண்டுகோளை விடுத்தார்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ‘சமகி ஜன பலவேகய’ ஆகிய கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இரு தரப்பினரும், தங்களுக்கு இடையிலான தனிப்பட்ட முரண்பாடுகளையும் கருத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, மீண்டும் ஒன்றிணைவதன் முக்கியத்துவத்தையும் அஷு மாரசிங்க வலியுறுத்திக் கூறினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.