;
Athirady Tamil News

மட்டக்களப்பு ஆற்றில் அடையாளம் தெரியாத சடலம்

0

மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில், நேற்று (19) மாலை 5.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாவியில் சடலம் ஒன்று மிதப்பதைப் பார்த்த பொதுமக்கள் இது குறித்துப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், அது ஓர் ஆணின் சடலம் எனக் கூறினர். எனினும், அவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சடலத்தை மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கு நீதிமன்ற அனுமதியைப் பெறும் நடவடிக்கைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.