;
Athirady Tamil News

நிஜ உலகில் வாழுங்கள்: கமேனி – டிரம்ப் சந்திப்பு தொடர்பாக ஈரான் கருத்து!

0

டிரம்ப் – கமேனி சந்திப்பு தொடர்பாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் மறுப்புத் தெரிவித்துப் பேசியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் – ஈரான் உச்சத் தலைவர் மோஜ்தபா கமேனி இடையே சந்திப்பு நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரகாச்சி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இருவருக்குமான சந்திப்பு நடைபெறக்கூடும் என டிரம்ப் முன்னர் கூறியிருந்த நிலையில் அதனை மறுத்து செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசினார். அதில், “டிரம்ப் கமேனியுடன் சந்திப்பு நடத்தத் தயாராக இருப்பதாகவும் அல்லது சந்திப்பு நடத்த விரும்புவதாகவும் ஒரு அறிக்கையைப் பார்த்தேன். நாம் யதார்த்தமாகச் சிந்தித்து, நிஜ உலகில் வாழ வேண்டும் எnறு நினைக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் தனது அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்த ஒப்புக்கொண்டதாகக் கூறிய டிரம்ப், ஈரானின் உச்ச தலைவர் கமேனியைச் சந்திக்கும் வாய்ப்பு தனக்கு அமையவில்லை என்றும் எதிர்காலத்தில் சூழ்நிலைகள் சரியாக அமைந்தால் கமெனியுடன் சந்திப்பு நடைபெற வாய்ப்பிருப்பதாக சூசகமாகக் கூறியதைத் தொடர்ந்து அப்பாஸ அரகாச்சி இவ்வாறு பேசினார்.

மேலும், ஈரானின் ராணுவத் திறனை அமெரிக்கா வெகுவாகக் குறைத்திருப்பதாகவும் டிரம்ப் பேசியிருந்தார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் அமெரிக்காவில் பெருமளவில் உள்நாட்டு எதிர்ப்பைச் சந்தித்துள்ளன. வருகிற நவம்பரில் நடைபெறவுள்ள பிரதிநிதிகள் சபை தேர்தலில் இது டிரம்ப் கட்சிக்கான ஆதரவை எந்த விதத்திலும் அதிகரிக்கவில்லை எனக் கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.