;
Athirady Tamil News

சிகிச்சையின் போதே விளக்கமறியலில் வைக்கப்பட்ட இலங்கையின் முன்னணி வர்த்தகர்

0

இலங்கையில் உள்ள முன்னணி ஆடைகள் வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவரான பிரீத்தி ஜயவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் விசாரணையின் போது இதயம் தொடர்பான மருத்துவக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

இதை அடுத்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போதே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுங்க அதிகாரிகளுடன் இருந்தபோது ஜயவர்தனவுக்கு இந்த மருத்துவ நிலை ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா உறுதிப்படுத்தியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பு பிரதம நீதவான் வைத்தியசாலைக்குச் சென்று, சந்தேக நபரை பார்வையிட்ட பின்னர் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுங்க வரி மதிப்பீட்டுப் பிரச்சினை ஒன்றின் அடிப்படையிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.