;
Athirady Tamil News

சவுதி அரேபியா: விமான நிலையம் மீது கடுமையான தாக்குதல் – 12 பேர் பலி; 309 பேர் காயம்

0

ரியாத்

சவுதி அரேபியா விமான நிலையம் மீது கடுமையான தாக்குதல் 12 பேர் பலியாகி உள்ளனர்.

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் அமெரிக்கா, எகிப்து, ஜோர்டான், சிரியா, பாலஸ்தீனம் மற்றும் சூடான் நாடுகளை சேர்ந்தவர்கள் அடங்குவர்.

இந்த தாக்குதலில், 309 பேர் வரை காயமடைந்தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது. அவர்களை மீட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். இதனால், விமான நிலையத்திற்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

இதனை சவுதி அரேபியாவின் விமான போக்குவரத்து கழகமும் உறுதிப்படுத்தி உள்ளது. சவுதி அரேபியா மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீனம், எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.