;
Athirady Tamil News

கடத்தப்பட்ட இலங்கை போக்குவரத்து சபை பேருந்து எரிபொருளின்றி மீட்பு

0

கொழும்பு – பெஸ்டியன் மாவத்தையில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கிச் (இ.போ.ச.) சொந்தமான பேருந்து ஒன்று திருடப்பட்டு, பேலியகொட பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

மேலதிக விசாரணை
வவுனியாவிலிருந்து நொச்சியாகம நோக்கி இயக்கப்படும் குறித்த பேருந்து, வவுனியாவுக்கு மீண்டும் இயக்கப்படுவதற்காக நேற்று முன்தினம் அதிகாலை கொழும்பு பெஸ்டியன் மாவத்தை பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

அதிகாலை நேரத்தில் பேருந்தின் சாவியை இரகசிய இடத்தில் மறைத்துவிட்டு ஓட்டுநர் கீழே இறங்கியிருந்த நிலையில், பகல் சேவைக்காக மற்றொரு ஓட்டுநர் வந்தபோது பேருந்து அங்கு காணப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டு, புறக்கோட்டைப் பகுதியில் தேடியும் பேருந்து கிடைக்காததால் உடனடியாக தீவிர விசாரணைகள் தொடங்கப்பட்டன.

இந்த நிலையில்,பேலியகொட பகுதியில் உள்ள வீதியொன்றில் குறித்த பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக மற்றுமொரு பேருந்து ஓட்டுநர் தகவல் அளித்துள்ளார்.

அதன்பேரில் காவல்துறையினர் சென்று பார்த்தபோது பேருந்து கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், பேருந்தில் இருந்த அனைத்து எரிபொருளும் (Diesel)எடுக்கப்பட்டிருப்பது (இழுத்துக் கொள்ளப்பட்டிருப்பது) தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து புறக்கோட்டை காவல்துறையினர் மற்றும் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்தின் விசாரணை அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், கொழும்பு கைரேகை பதிவு அலுவலக அதிகாரிகளும் பேருந்திற்கு வந்து தடயங்களை சேகரித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.