“கோடா ஹோ கம” தரைமட்டம் !! (வீடியோ)

ஜே.வி.பி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க, கோட்ட ஹோ கமவுக்கு சற்றுமுன்னர் வருகைதந்தார். அவர், தனது கோபத்தை கடுமையாக வெளிப்படுத்தினார்.
கோட்ட ஹோ கம முற்றாக அழிக்கப்பட்டது. அவ்விடத்தில் நிலைமை மிகவும் பதட்டமாக இருக்கிறது.
கொழும்பில் பொலிஸ் ஊரடங்கு
கொழும்பு தெற்கு, வடக்கு, மத்தியப் பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
களத்துக்கு வந்தார் அநுர
கோட்டாகோகம, மைனாகோகம ஆகிய இடங்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் ஏற்படுத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட குழுவினர் வருகைத்தந்துள்ளனர்.
சஜித் மீதும் தாக்குதல்
கோட்டாகோகம, மைனாகோகம ஆகிய இடங்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால் ஏற்படுத்தப்பட்ட வன்முறைச் சம்பவங்களை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்டக் குழுவினர் தற்போது வருகைத்தந்திருந்தனர்.
இதன்போது எரான் விக்ரமரத்ன எம்.பி மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டதைத் தொடர்ந்து சஜித்தும், எரானும் ஒரே வாகனத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஏற்றப்பட்டு சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
காலி முகத்திடல் மோதலில் 9 பேர் வைத்தியசாலையில் அனுமதி
காலி முகத்திடலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த 9 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.