விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவ பெருவிழா பாற்குடபவணி!! (வீடியோ, படங்கள்)
மட்டக்களப்பு – விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவ பெருவிழா பாற்குடபவணி இன்று இடம்பெற்றது.
மன்முணை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விளாவட்டவான் அருள்மிகு ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவ பெருவிழா பாற்குடபவணியுடன் இன்று ஆரம்பமானது.
இன்று காலை நாவற்காடு அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து விஷேட பூஜைகளுடன் ஆரம்பமான பாற்குடபவணியானது பிரதான வீதியின் ஊடாக ஓம் சக்தி ஓம் பராசக்தி என உச்சரித்தவாறு அடியார்கள் தமது சிரசில் பாற்குடங்களை சுமந்துவந்து அன்னை ஸ்ரீ வீரமா காளியம்பாளுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது.
பாலாபிஷேகத்தினை தொடர்ந்து அன்னை ஸ்ரீ வீரமா காளியம்பாளுக்கு விஷேட பூஜைகளும் இடம்பெற்றிருந்தது.
மூலவர் கர்ப்ப கிரகத்திலே இலங்கையில் முதல் முறையாக ஆறு அடி உயரத்தில் கருங்கல் திருவாசியுடன் விக்ரகம் அமையப்பெற்ற சிறப்பினை கொண்ட விளாவட்டவான் ஸ்ரீ விரமா காளியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு பெருவிழா இன்று (02.10.2022) ஆரம்பமாகி எதிர்ரும் 09 ஆம் திகதி அதிகாலை திருப்பள்ளையம் மற்றும் தீ மிதிப்புடன் இனிதே நிறைவடைய இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

















