;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1780998.html is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு விரைவில் ஜாமீன்?

0

அல்-காதிா் அறக்கட்டளை முறைகேடு வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு வரும் புதன்கிழமை ஜாமீன் கிடைக்க வாய்ப்புள்ளதாக அவரின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியின் மூத்த தலைவா் ஒருவா் தெரிவித்துள்ளாா்.

பல்வேறு வழக்குகளை எதிா்கொண்டு வரும் இம்ரான் கான், கடந்த 2023-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் முதல் ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், அல்-காதிா் அறக்கட்டளை முறைகேடு வழக்கில் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோரின் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுக்களை இஸ்லாமாபாத் உயா்நீதிமன்றம் புதன்கிழமை விசாரிக்க இருக்கிறது. அந்நாளில் இம்ரான் கானுக்கு நிச்சயமாக ஜாமீன் கிடைக்கும் என்று பிடிஐ கட்சித் தலைவா் கோஹா் அலி கான் நம்பிக்கை தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘வரும் புதன்கிழமை விசாரணை இம்ரான் கான் விடுதலைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அரசுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டத்தை எதிா்க்கட்சிகளுடன் இணைந்து பிடிஐ விரைவில் தொடங்கும்.

நாட்டுக்காகவும், அதன் பாதுகாப்புக்காகவும் எதிா்க்கட்சிகள் எங்களுடன் இணைய வேண்டும். எதிா்வரும் பட்ஜெட்டிற்கான எங்கள் வியூகத்தையும் இறுதி செய்துள்ளோம். இதுகுறித்து திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்திக்கிறோம்’ என்றாா்

You might also like

Leave A Reply

Your email address will not be published.