காத்தான்குடி பகுதியில் கரையொதுங்கிய மர்மப்பொருள் – கடற்படையினர் விசாரணை
video link-
https://fromsmash.com/dKlH~
மட்டக்களப்பு – காத்தான்குடி கடற்கரையில் பாரிய அளவிலான மர்மப்பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
இந்த பொருள் கடந்த புதன்கிழமை (13) கரையொதுங்கியதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
சுமார் 25 அடி நீளமும் 4 அடி உயரமும் கொண்ட இந்த மர்மப்பொருள் ரெஜின் வகை பொருளால் செய்யப்பட்டதாக காணப்படுகிறது.
கப்பல் தரைதட்டும் போது அதன் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படும் தடுப்பு அமைப்பாக இது இருக்கக்கூடும் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இந்த மர்மப்பொருள் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடற்படையினர் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
தற்போது குறித்த மர்மப்பொருள் காத்தான்குடி கடற்கரையிலேயே காணப்படுவதுடன், அதனை பார்வையிட பொதுமக்கள் திரளாகக் கூடிவருகின்றனர்.