;
Athirady Tamil News

மொஜ்தபா கமேனி பற்றி தகவல் அளித்தால் ரூ. 92.54 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு

0

ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி மற்றும் பல ஈரான் தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை 10 மில்லியன் டாலர் வரை வெகுமதியை அறிவித்துள்ளது. அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட பிறகு அவரது மகன் மொஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

அவர் உள்பட ஈரானின் பல முக்கிய தலைவர்களை ‘ஈரானிய பயங்கரவாதத் தலைவர்கள்’ என்று குறிப்பிட்டு அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இந்த நபர்கள் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் பல்வேறு படைப்பிரிவுகளை கட்டளையிட்டு வழிநடத்துகிறார்கள். இவர்களை பற்றிய தகுதியான தகவல்கள் அளித்தால் 10 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 92.54 கோடி) வரை வெகுமதி அளிக்கப்படும். இது நீதிக்கான வெகுமதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மிகப்பெரிய பரிசாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.