;
Athirady Tamil News

அமெரிக்காவின் இரட்டை வேடம் : ரஷிய எண்ணெய் விவகாரத்தில் ஈரான் கடும் விமர்சனம்

0

தெஹ்ரான்,

ரஷியா-உக்ரைன் பிரச்சினையை தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை மேற்கத்திய நாடுகள் நிறுத்தின. ஆனால் ரஷியாவின் அதீத தள்ளுபடியை பயன்படுத்திய இந்தியா அதிக இறக்குமதியில் ஈடுபட்டன. இது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்தியா மீது 50 சதவீதம் வரிவிதித்தார். இதனை தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவதாக இந்திய பிரதமர் மோடி கூறியதாக டிரம்ப் தெரிவித்தார்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியாவின் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை குறைத்தது.

இந்நிலையில் வளைகுடாவில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல் பாதைகளை ஈரான் தடுத்துள்ள நிலையில், இந்தியா தனது எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதற்கு அமெரிக்கா 30 நாட்கள் அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

ரஷியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துமாறு இந்தியாவை மிரட்டுவதில் அமெரிக்கா பல மாதங்கள் செலவிட்டது. ஈரானுடனான இரண்டு வாரப் போருக்குப் பிறகு, வெள்ளை மாளிகை இப்போது இந்தியா உட்பட உலக நாடுகளிடம் ரஷிய கச்சா எண்ணெயை வாங்குமாறு கெஞ்சுகிறது. ஈரான் மீதான சட்டவிரோத போரை ஆதரிப்பது ரஷியாவிற்கு எதிராக அமெரிக்காவின் ஆதரவைப் பெறும் என்று ஐரோப்பா நினைத்தது என்று அதில் பதிவிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.