;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் கைது

0

யாழ்ப்பாணத்தில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

யாழ் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவின் போதை குற்ற தடுப்புக்கு பொறுப்பாகவுள்ள பொ.பா.விஜயராஜா தலைமையிலான பொலிஸ் குழுவினரால் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மானிப்பாய் சுதுமலை பகுதியைச் சேர்ந்த 24 வயது உடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

கைதான சந்தேக நபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நாளைய தினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.