;
Athirady Tamil News

யாழில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு வீச்சு; வன்முறை குழு அட்டகாசம்

0

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தரோடை பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இனந்தெரியாத கும்பல் ஒன்றினால் இன்று (25) அதிகாலை 12.30 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், அத்துமீறி உள்நுழைந்த குழு வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கிவிட்டு பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த சுன்னாகம் பொலிஸாரும், தடயவியல் பொலிசாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.