;
Athirady Tamil News

பஞ்சாப்: சாலை தடுப்பு மீது கார் மோதி கோர விபத்து – 5 பேர் பலி

0

சண்டிகர்,

குஜராத் மாநிலத்தை சேர்ந்த சதீஷ், பரத், அர்ஜுன், ஜனக், அமிதா ஆகிய 5 பேர் இன்று காரில் பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் இருந்து அரியானாவின் டப்லாலி நகருக்கு சென்றுகொண்டிருந்தனர். காரில் பயணித்தவர்களில் அமிதா என்ற இளம்பெண் குஜராத் காவல்துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், பஞ்சாப்பின் பதிண்டா மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவர் மீது மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், 5 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.