;
Athirady Tamil News

விகாரைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மகிந்தவின் அதிசொகுசு இரகசிய அறை

0

குருநாகல் நகரில் அமைந்துள்ள பிரபலமான விகாரை ஒன்றுக்குள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயன்படுத்திய அதி சொகுசு அறையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த அறை தொடர்பில் விகாரையை சேர்ந்த பௌத்த தேரர் ஒருவர் தெரிவித்த கருத்துக்களே தற்போது பேசுபொருளாகியுள்ளன.

இரகசிய விடயங்கள்
மேலும், இது தொடர்பான காணொளிகள் இணையத்தங்களில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தென்னிலங்கை சிங்கள ஊடகம் ஒன்றும் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் தெரிய வருகையில், இதன்படி குறித்த அறையில் மகிந்த ராஜபக்ச இரவு தங்கியதில்லை என்றும் ஆனால் அவசரமாக வருகைத்தந்து பல மணிநேரம் இருப்பார் என்றும் அங்கு உள்ள தேரர் ஒருவரால் கூறப்படுகிறது.

அவர் வருவதற்கு முன்னர் விகாராதிபதிக்கு அறிவிப்பார். பின்னர் நாங்கள் தான் சுத்தம் செய்து எல்லா ஏற்பாடுகளையும் செய்வோம்.

அவர் வருகைத்தந்த பின்னர் விருந்துபசாரம் எல்லாம் நடைபெறுவதால் எங்களுக்கு இந்த பக்கம் வரமுடியாது, நாங்கள் எமது அறையில் இருந்து வெளியில் வருவதில்லை என்றும் குறித்த தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த காணொளியில் அறையில் அதி சொகுசான கட்டிலும் மெத்தை போடப்பட்டுள்ளமையும், குளிரூட்டியும் பொறுத்தப்பட்டுள்ளமையும், அறையின் உட்கட்டமைப்புகள் அதி சொகுசான விலையுர்ந்து பொருட்களில் அமைக்கப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது. அந்த அறையில் இருந்து யாரும் அறியாத வண்ணம் வெளியில் செல்லக் கூடிய சிறிய கதவும் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இரும்பு கதவை பூட்டினால் உள்ளே வாகனம் இருப்பது மற்றும் யாரும் இருப்பது வெயில் தெரியாது என அந்த தேரர் விளக்கியுள்ளார். மகிந்த இங்கு வந்து தான் தனது இரகசிய விடயங்களில் ஈடுபடுவதாக குறித்த தேரர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அங்கு கூடியிருந்த கிராமத்து மக்களுக்கு இவ்வாறான ஒரு அறையிருப்பது தெரியாது என குறிப்பிட்டுகின்றனர். அத்தோடு 20 வருடங்களாக குறித்த விகாரைக்கு வந்த செல்லும் ஒருவரும் தனக்கும் தெரியாது என கூறியுள்ளார்.

இந்நிலையில் அங்கு இருக்கும் சிரேஷ்ட பிக்கு ஒருவர் இதை மறைப்பதற்கான கருத்துக்களை தெரிவித்து, ஊடகவியலாளர்களுக்கு இதை மறைப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.