;
Athirady Tamil News

தாக்கப்பட்டதா அமெரிக்காவின் பெரும் போர் கப்பல் ; ஈரானுக்கு கிடைத்த பதிலடி

0

அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பஹ்ரைன், குவைத், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

ராணுவ தளங்கள் மீதும் தாக்குதல்
அத்துடன் அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது. 17 ராணுவ தளங்கள் டார்கெட் செய்யப்பட்டன என்று ஈரான் தெரிவித்துள்ளது.

அத்துடன் வளைகுடா பகுதிகளில் செல்லும் எண்ணெய் கப்பல்களையும் ஈரான் குறிவைத்துள்ளது. இதற்கிடையே வளைகுடா கடல் பகுதியில் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆபிரகாம் லிங்கன் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் இருந்து விமானங்கள் பறந்து சென்று ஈரானை தாக்கி வருகிறது. இந்த நிலையில் ஆபிரகாம் லிங்கன் மீது 4 பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஆனால் அமெரிக்காவின் மத்திய கமாண்ட் (CENTCOM) ஈரானின் கூற்றை மறுத்துள்ளது. ஒருவேளை ஈரான் சொல்வது உண்மை என்றால், அமெரிக்காவுக்கு இது மிகப்பெரிய இழப்பாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.