;
Athirady Tamil News

அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு; ஈரான் கப்பலில் பலியானவர்களின் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

0

இலங்கைக்கு அருகில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனா கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா இலங்கையை வலியுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கைக்கு அருகே நீர்மூழ்கிக் கப்பலால் தாக்கப்பட்ட ஈரானின் போர்க்கப்பலில் உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

பிரேத பரிசோதனை
குறித்த பிரேத பரிசோதனையில், வெடிப்பு காரணமாக ஏற்பட்ட எலும்பு முறிவுகள், உள் காயங்கள், நீரில் மூழ்குதல் போன்ற காரணங்களால் அவர்கள் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த உடல்களின் பிரேத பரிசோதனைகள் சிறப்பு தடயவியல் மருத்துவ அதிகாரிகள் குழுவால் நடத்தப்பட்டன.

அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளாகி மூழ்கிய ஈரானிய கப்பலில் இருந்த 84 பேரின் சடலங்கள் இலங்கை கடற்படை மீட்டதுடன் 35 பேரை மீட்டு காலி கராப்பிட்டிய சிகிச்கைக்காக அனுமதித்தனர்.

அத்துடன் வியாழக்கிழமை இரவு இலங்கை கடற்படை இரண்டாவது ஈரானிய கப்பலான ஐஆர்ஐஎஸ் பூஷெரிலிருந்து 208 பணியாளர்களை மீட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.