;
Athirady Tamil News

ஈரானின் 6000 இலக்குகள் தாக்கி அழிப்பு: அமெரிக்காவின் சென்ட்காம் வெளியிட்ட அறிக்கை

0

ஈரானுடனான மோதலில் இதுவரை 6000 இலக்குகளை தாக்கி அழித்து இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

6000 இலக்குகள் அழிப்பு
மத்திய கிழக்கில் ஈரானுடன் ஏற்பட்டுள்ள போர் நடவடிக்கையை விளக்கும் புதிய தரவுகளை அமெரிக்க மத்திய கட்டளை அமைப்பு(CENTCOM) வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில், ஈரானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள நேரடி தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரை கிட்டத்தட்ட 6000 ஈரானிய இலக்குகளை தாக்கி வெற்றிகரமாக அமெரிக்க படைகள் அழித்து இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை 90க்கும் மேற்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பிற கப்பல்கள் இடைமறிக்கப்பட்டுள்ளன அல்லது தாக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 30-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மைன்லேயர்கள் அதாவது கடலில் கண்ணிவெடிகளை வைப்பதற்காக பயன்படுத்தப்படும் பிரத்யேக கப்பல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் பிராந்திய நிலைத்தன்மையை நிலைநிறுத்துவதற்காக அமெரிக்கா வான்வழி, தரைவழி மற்றும் கடல்வழி என அனைத்து விதமான மூலோபாய தளவாடங்களையும் ஈரானுக்கு எதிராக பயன்படுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.