;
Athirady Tamil News

மணமகள் மீது ஆசிட் ஊற்றிய மணமகனின் காதலி

0

இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில், திருமணத்துக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், மணமகள் மீது ஆசிட் ஊற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

மணமகள் மீது ஆசிட் ஊற்றிய மணமகனின் காதலி
புதுடெல்லியிலுள்ள இந்திரா விஹார் என்னுமிடத்தைச் சேர்ந்த 21 வயதான பெண்ணொருவருக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை, அதாவது, ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில், அவருக்கு மெஹந்தி அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்திருக்கிறது. அப்போது அங்கு வந்த 26 வயது பெண்ணொருவர் மணமகள் மீது ஆசிட் ஊற்றிவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

மணமகள் ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

ஆசிட் வீசிய பெண்ணை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், அவரும் மணமகனும் ஏற்கனவே காதலித்துவருவதாக கூறப்படுகிறது.

அதிர்ச்சியை உருவாக்கிய இந்த சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.