;
Athirady Tamil News

ஈரானுக்கு எதிரான கடல்வழி முற்றுகை: 45 வணிக கப்பல்களை திருப்பி அனுப்பிய அமெரிக்கா

0

ஈரானுக்கு எதிரான கடல்வழி முற்றுகை நடவடிக்கை தீவிரமடைந்துள்ள நிலையில் 45 வணிக கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

திருப்பி அனுப்பப்பட்ட கப்பல்கள்
ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் நடவடிக்கையில் இறுதி ஒப்பந்தம் இதுவரை எட்டப்படாத நிலையில் அமெரிக்க படைகள் ஈரானுக்கு எதிரான கடல்வழி முற்றுகையை தொடர்ந்து வருகின்றனர்.

முற்றுகை நடவடிக்கையின் தற்போதைய நிலவரப்படி சுமார் 45 வணிக கப்பல்கள் வந்த வழிக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

விதிக்கப்பட்ட கடல்வழி நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றுவதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கடல்வழி விதிமுறைகளை நிலைநாட்டவும், இப்பகுதிக்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அமெரிக்க படைகளின் இந்த ரோந்து பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் CENTCOM அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கப் படைகளால் தடுத்து நிறுத்தப்படும் கப்பல்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து வருவது பிராந்திய போக்குவரத்தில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.