;
Athirady Tamil News

சர்வதேச பளுதூக்கல் போட்டியில் யாழ் மாணவன் சாதனை!

0

சமோவா நாட்டில் நடைபெற்ற சர்வதேச நாடுகள் பங்கேற்ற ‘Samoa IBFC Universal Weightlifting Cup – 2026’ பளுதூக்கல் போட்டியில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவன் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் உரும்பிராயைச் சேர்ந்தவரும், யாழ். இந்துக்கல்லூரி மாணவருமான பரமலிங்கம் தாரகன், கனிஷ்ட பிரிவின் (Junior) +110Kg எடைப்பிரிவில் இலங்கை சார்பாகப் போட்டியிட்டார்.

நேற்றுமுன்தினம் (மே 01) நடைபெற்ற இப்போட்டியில், இவர் 98Kg ஸ்னாட்ச் (Snatch) முறையிலும், 132Kg கிளீன் அண்ட் ஜெர்க் (Clean and Jerk) முறையிலும் என மொத்தமாக 230Kg எடையைத் தூக்கினார்.

இதன் மூலம் சர்வதேச மட்டத்தில் 3ஆம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தைச் சுவீகரித்தார்.

சர்வதேச அரங்கில் இலங்கைக் கொடியை ஏந்தி, நாட்டுக்கு பெருமை சேர்த்த மாணவனுக்குப் பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.