;
Athirady Tamil News

மராட்டியம்: அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து – 6 பேர் பலி

0

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழையால் சாலைகள், குடியிருப்புகளில் மழை நீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது.

6 பேர் பலி
இந்நிலையில், அம்மாநிலத்தின் தலைநகர் மும்பையில் மன்குர்ட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கனமழை காரணமாக இன்று காலை இடிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் குடியிருப்பில் இருந்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.