;
Athirady Tamil News

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரின் 7 கோடி சொத்துக்கள் முடக்கம்

0

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் சொத்துக்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்குச் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

சந்தேகநபர்கள் இந்த சொத்துக்களைத் தங்களது நெருங்கிய உறவினர்களின் பெயர்களில் கொள்வனவு செய்துள்ளதாகப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எம்பிலிபிட்டிய, காந்திஸ்ஸபுர பகுதியில் அமைந்துள்ள சுமார் ஒரு ஏக்கர் காணியும், அதன் பகுதியிலுள்ள மூன்று மாடி வீடும் முடக்கப்பட்டுள்ளன. இதன் பெறுமதி சுமார் 7 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

எம்பிலிபிட்டிய புதுநகர் பகுதியில் அமைந்துள்ள 23.7 பேர்ச்சஸ் காணியும், அதிலுள்ள மூன்று மாடி வீடும் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.