;
Athirady Tamil News

இலங்கைக்கு சுற்றுலா வந்த பயணி மீது தொற்றிக் கொண்ட வௌவால்!

0

நாட்டுக்கு சுற்றுலா வந்த பயணி ஒருவர் மீது வௌவால் ஒன்று வந்து தொற்றிக் கொண்ட அரிய காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

வௌவால் தொற்றிக் கொண்டதும் அச்சுறுத்தும் அந்தச் சூழலிலும் பதற்றமடையாமல் அந்தப் பயணி அமைதியாக நின்ற விதம் இணையவாசிகளை கவர்ந்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள காணொளி
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள காணொளி ஒன்றில்,சுற்றுலாப் பயணியின் மீது திடீரென வந்து அமர்ந்த வௌவால் அவரை விட்டு நகராமல் ஒட்டியுள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்தாலும், பயந்து ஓடாமல் குறித்த சுற்றுலாப்பயணி அமைதியாக ஒரே இடத்தில் நின்றார்.

அருகில் இருந்த மற்றொருவர் அந்த வௌவாலை அகற்ற அவருக்கு உதவ முயன்றார். இந்தநிலையில்,”நீங்கள் இலங்கைக்குச் செல்லும் போது… பெட்மேனே உங்கள் மீது விழுந்தால்…” என்ற நகைச்சுவையான தலைப்புடன் இந்த காணொளி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.