;
Athirady Tamil News

அமெரிக்கா: சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்து – 9 பேர் பலி

0

வாஷிங்டன்,

அமெரிக்காவில் சிறிய ரக ஜெட் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

ஜெட் விமானம்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் அகஸ்டின் நகரில் இருந்து பஹாமாஸ் தீவுக்கு நேற்று மாலை (அந்நாட்டு நேரப்படி) சிறிய ரக ஜெட் விமானம் புறப்பட்டது. தனியாருக்கு சொந்தமான அந்த ஜெட் விமானத்தில் 9 பேர் பயணித்தனர்.

விபத்து – 9 பேர் பலி
இந்நிலையில், புளோரிடா மாகாணத்தின் கிறிஸ்த்வென் பகுதியில் உள்ள வான்பரப்பில் சென்றபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஜெட் விமானம் அதிவேகமாக சாலையோரம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானம் தீப்பற்றி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் ஜெட் விமானத்தில் பயணித்த 9 பேரும் உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் விபத்துக்குள்ளான ஜெட் விமானத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் என்ன? விபத்தில் உயிரிழந்தவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.