;
Athirady Tamil News

புங்குடுதீவு “தல்லயபற்று முருகன் ஆலய குளம்” முதற்கட்டமாக கால்நடைகள் நீர் அருந்துவதுக்கான பாதை அமைப்பு.. (படங்கள், வீடியோ)

0

புங்குடுதீவு “தல்லயபற்று முருகன் ஆலய குளம்” முதற்கட்டமாக கால்நடைகள் நீர் அருந்துவதுக்கான பாதை அமைப்பு.. (படங்கள், வீடியோ)

புங்குடுதீவு குறிச்சிக்காடு பகுதியில் கால்நடைகளுக்கான நீர்ப்பாதை அமைப்பு நிறைவு!
புங்குடுதீவு குறிச்சிக்காடு பகுதியில், தல்லையப்பற்று முருகன் ஆலயத்திற்குச் சொந்தமான காணியில் அமைந்துள்ள குளத்தை அண்டி, கால்நடைகள் இலகுவாகச் சென்று நீர் அருந்துவதற்கான பாதை இன்று அமைக்கப்பட்டுள்ளது.

முன்னர் செடிகள் அடர்ந்து பற்றைக்காடாகக் காணப்பட்ட இப்பகுதி ஆவரசம்குண்டு என அழைக்கப்பட்டது.

அமரர் முன்னாள் அதிபர் திரு. இலங்கையர் கனகசபை செல்வரெடணம் அவர்களின் நினைவாக, அவரது மகன் சுரேஸ், மருமகள் உஷா மற்றும் அவர்களது பிள்ளைகள் ஆகியோரின் நிதிப் பங்களிப்பில் இங்கு அழகிய தல்லையப்பற்று முருகன் குளம் உருவாக்கப்பட்டது.

குளத்தைச் சுற்றி பலமான அணையும் அமைக்கப்பட்டு, நீர்வளத்தைப் பாதுகாக்கும் வகையில் இப்பணி முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கால்நடைகள் இலகுவாகச் சென்று நீர் அருந்துவதற்கான பாதையும், பொதுமக்கள் குளத்தைப் பார்வையிடுவதற்கான படிக்கட்டுகளும் அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில், அறிவித்தபடி முதற்கட்டமாக இன்று கால்நடைகளுக்கான பாதை அமைக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாகப் பொதுமக்கள் குளத்தைச் சென்று பார்வையிடுவதற்கான படிக்கட்டுகளும் விரைவில் அமைக்கப்படவுள்ளன.

இந்த முயற்சி வெறுமனே ஒரு குளத்தை உருவாக்கிய பணியாக மட்டும் அமையாமல், ஊரின் நீர்வளத்தைப் பாதுகாத்து, கால்நடைகளின் வாழ்வாதாரத்திற்கும் எதிர்காலச் சந்ததியினருக்கும் பயனளிக்கும் ஒரு சிறப்பான பொதுநலப் பணியாகவும் அமைந்துள்ளது.

இந்த உன்னதமான பணிக்கு நிதிப் பங்களிப்பு வழங்கிய சுரேஸ் உஷா குடும்பத்தினருக்கும், இதற்காக உழைத்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும்.

நீர்வளத்தைப் பாதுகாப்போம்!
ஊரின் வளத்தைப் பாதுகாத்து, ஊரையும் பாதுகாப்போம்!

நல்லதே நினைப்போம்!
நல்லதே செய்வோம்!
நல்லதே நடக்கும்!

புங்குடுதீவு “தல்லயபற்று முருகன் ஆலய குளம்” முதற்கட்டமாக கால்நடைகள் நீர் அருந்துவதுக்கான பாதை அமைப்பு.. (வீடியோ)

You might also like

Leave A Reply

Your email address will not be published.